Vijaya Yatra for Sri Sri Anna

ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் கோலோக விஜய யாத்திரை முதல் வருட பாகவத ததீயாராதனை, ஸ்வஸ்திஸ்ரீ க்ரோதி வருடம், ஆவணி மாதம் மூன்றாம் தேதி (19-08-24) அன்று கோவிந்தபுரம் சைதன்ய குடீரத்தில் ஸ்ரீஸ்வாமிஜி முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

நூற்றுக்கும்மேலான பாகவதர்களுக்கு சிறப்பான வரவேற்பும், பாதபூஜையும், ததீயாராதனையும் சிரத்தையாக செய்யப்பட்டது. காலை 10மணியளவில் பாகதவர்கள் ஶ்ரீ பகவன்னாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் ஶ்ரீஶ்ரீ அண்ணா அருளிச்செய்த குரு கீர்த்தனங்களை பாடினார்கள். பிறகு 10:30 மணியளவில் அனைத்து பாகவதர்களும், சத்திரசாமர-யானை-ஒட்டகம்- குதிரை முதலிய ராஜ உபசாரத்துடன், ஶ்ரீ பகவன்னாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்திலிருந்து சைதன்ய குடீரம்வரை, தெரு முழுவதும் அலங்கார பந்தல், சிகப்பு கம்பள விரிப்பு, வான வேடிக்கையோடு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

சைதன்ய குடீரத்தில் பூர்ணகும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் ப்ரேமிக ஜகன்னாதர் சன்னதியில் அஷ்டபதி பஜனை செய்தார்கள். அனைத்து பாகவதர்களுக்கும் சிறப்பாக பாதபூஜை செய்யப்பட்டது. ப்ரேமிக ஜகன்னாதருக்கும், சைதன்ய-நித்யானந்தருக்கும் பூஜை நடந்தது. பிறகு பாகவத ததீயாராதனை விமர்சையாக நடந்தது. பாகவதர்களின் ததீயாராதனைக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் ப்ரசாதம் எடுத்துக்கொண்டார்கள்.

இவ்வாறாக ஶ்ரீ ஶ்ரீஅண்ணாவின் கோலோக விஜய யாத்திரை முதல் வருட பாகவத ததீயாராதனை இனிதே பூர்த்தியானது.

Leave a Comment

  • Subha Muthuraman September 3, 2024, 8:57 am

    Radhe Radhe. Pranams And Prostrations to Sri Sri Anna’s and Guruji Maharaj’s Lotus Feet. Humble Namaskarams to the Blessed Bhagavadhars who were honoured b function which portrayed Grace and Grandeur, in equal measure! This well-heeled program blossomed thanks to our Guruji Maharaj who has patterned it in a Magnificent Scale. Our eyes are fortunate to witness the photographs that mirror the Rich Design and Versatility of the event,p passionately carved by our Veritable Master. Guruji Maharaj has galvanized the Precious Volunteers to execute the Divine Tasks, with aplomb. Grateful to Guruji Maharaj for stirring emotional Resonance by this Unparalleled Vijaya Yatra of our Reverenced Sri Sri Anna!

  • S Balasubramanian September 3, 2024, 10:58 am

    Radhe Radhe. Jai G

Recent Posts

Sri Swamiji’s Event Updates – November 2025

On November 1st, Sri Swamiji was at Madhurapuri Ashram Read more

Important Announcement

Read more

Sri Swamiji’s Event Updates – October 2025

On October 31st morning, Sri Swamiji attended a private function in Chennai. Later, He reached Madhurapuri Ashram. October 30th being Sravanam, Sri Swamiji had darshan of Sri Premika Srinivasa Perumal at Premika Bhavanam. On October 29th, Sri Swamiji celebrated Gopashtami at Madhurapuri Ashram. In the evening, He led Sri Premika Varadan procession. On October 27th Read more