Sri Sri Anna’s Goloka Vijaya Yatra – Third Annual Sri Vaishnava Bhagavata Tadhiyaradhana

ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் கோலோக விஜய யாத்ரை மூன்றாவது வருட ஸ்ரீ வைஷ்ணவ பாகவத ததீயாராதனை

27-08-2026
மாலை 5-7 மணி
ஸ்ரீபெரும்புதூர் க்ஷேத்ரம்

“ராமானுஜா! ராமானுஜா!!”
“நாராயணா! நாராயணா!!”
“கோவிந்தா! கோவிந்தா!!”
என்ற இந்த நாம கோஷம், ஸ்ரீவேங்கடாதிரி சுவாமிகளின் பஜனைகள், சம்ப்ரதாய பஜனைகள், திவ்யப்ரபந்த பஜனைகள், இவைகளின் ஊடே எம்பெருமானாரின் திவ்ய அவதார தலமான திருப்பெரும்புதூரில் விண்ணை பிளந்தது. ஆம்! நம் அருமையிலும் அருமையான ஸத்குருநாதர் – ஸ்ரீஸ்ரீஅண்ணா அவர்கள் என்றும் உகக்கும் இந்நாமங்களின் கீர்த்தனத்தை 36 கோஷ்டிகளைச் சார்ந்த 550க்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்கள் நம் ஸ்ரீ ஸ்வாமிஜியின் முன்னிலையில் ராக, தாள, ஆலாபன, பக்கவாத்தியங்களுடன் திருப்பெரும்புதூரின் திருவீதிகளை கீர்த்தனம் செய்து வலம் வந்தனர்.

பவித்ரோத்ஸவம் கண்டருளிய எம்பெருமானும், எம்பெருமானாரும், திருவீதி புறப்பாடு கண்டருள, அதன் பின்னே இந்த நகர பஜனமும் அருமையாக நடந்தேறியது.

இந்த பாகவதர்களின் அருமையான பஜனத்தை ஒட்டி, நம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முதலில் மஹாமந்திர கீர்த்தனம் செய்ய, சுமார் 500 ஸத்ஸங்க அன்பர்கள் பின் தொடர்ந்தனர். நம் ஸ்ரீஸ்ரீஅண்ணா அருளிய “ராமானுஜா யதி ராமானுஜா” என்ற தமிழ் அருளிச்செயலை ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் பாட, அனைவரும் வாங்கி பாடினார்கள். அடுத்து நம் ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் இனிமையாக கருணையை கொண்டாடும் மதுரகீதமான “அழைத்தழைத்து என்னை க்ருபை செய்திடுவாரே….” என்ற கீர்த்தனத்தை ஸ்ரீஸ்வாமிஜி பாட, அனைவரும் நம் ஸ்ரீஸ்ரீஅண்ணாவின் திவ்யமான ஸ்மரணையோடு பாடினார்கள்; ஸ்ரீஸ்ரீஅண்ணா அவர்கள் நமக்கு அனுக்ரஹித்த கடாக்ஷத்தை நினைத்து நினைத்து க்ருதக்ஞதையுடன் கூப்பிய கைகளோடும், கலங்கிய கண்களோடும், நிறைந்த நெஞ்சோடும் நம் ஸத்ஸங்க பக்தர்கள் வீதிகளை ப்ரதக்ஷிணம் செய்து வந்தனர். பூர்த்தியாக “பாஷ்யகாரம் பஜே பாஷ்யகாரம்” என்ற மதுரகீதம் பாடப்பட்டது. கலியை கண்டனம் செய்யும் நாமகீர்த்தனத்தை முழங்கிய ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்கள் அனைவரும் ஸ்ரீ கலியன் ராமானுஜ கூடத்தில் கௌரவிக்கப்பட்டனர்; அவர்களுக்கு ததீயாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 1000 பேருக்கு ததீயாராதனை ஸம்ருத்தியாக குருவருளால் செய்யப்பட்டது.

அர்ச்சாவதாரத்தையும் நாம கீர்த்தனத்தையுமே தன் ப்ராணனாக கொண்ட நமது ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்களின் கோலோக விஜய யாத்ரை மூன்றாவது வருட ஸ்ரீ வைஷ்ணவ பாகவத ததீயாராதனை, எம்பெருமானார் கோவில் கொண்ட தலத்தில், பரம ஶ்ரீ வைணவ பாகவதர்களை பூஜிக்கும் வண்ணம் அமைந்தது மிகவும் திவ்யமாக அவர் அருளாலேயே அமைந்தது. இவ்வாறாக இந்நிகழ்ச்சி ‘கல்யாண ஸ்ரீனிவாசன் பஜனை மண்டலி’யின் சார்பாக, நம் ஸ்ரீஸ்வாமிஜியின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

ராதே! ராதே!!

ஸ்ரீ ஸ்ரீ ப்ரேமிகேந்த்ர ஸத்குரு மஹராஜ் கி ஜெய்!!

 

Sri Sri Anna’s Goloka Vijaya Yatra

Third Annual Sri Vaishnava Bhagavata Tadhiyaradhana

27 August 2026
5:00–7:00 PM
Sriperumbudur Kshetra

The holy streets of Tirupperumbudur, the sacred birthplace of Emperumanar (Sri Ramanujacharya), reverberated and seemed to pierce the heavens with the divine chanting:

“Ramanuja! Ramanuja!!”
“Narayana! Narayana!!”
“Govinda! Govinda!!”

Amidst the bhajans of Sri Venkataadri Swamigal, Sampradaya bhajans, Divya Prabandha bhajans, and the resounding Nama Sankirtana, the sacred streets of Tirupperumbudur came alive.

Indeed, more than 550 Sri Vaishnava Bhagavatas belonging to 36 Goshtis, led by our revered Sri Swamiji, went around the sacred streets of Tirupperumbudur, singing and glorifying the divine Names that our most beloved Sadguru Sri Sri Anna eternally delights in. The Nama Kirtana was accompanied by beautiful raga, tala, alapana, and instrumental accompaniment.

The Lord and Emperumanar, who had graciously given darshan during the Pavitrotsavam, blessed the sacred procession through the streets. Following their divine procession, the Nagara Bhajan took place in a most beautiful and auspicious manner.

Following the wonderful bhajans by the Bhagavatas, our Sri Swamiji began the chanting of the Maha Mantra, with nearly 500 Satsang devotees joyfully joining and following him.

Sri Swamiji then sang the Tamil Aruliccheyal graciously bestowed upon us by Sri Sri Anna:

“Ramanuja! Yati Ramanuja!”

Everyone joined in and sang along.

Thereafter, Sri Swamiji sang the beautiful and melodious kirtan celebrating the boundless compassion of our Sri Sri Anna:

“Azhaithazhaithu Ennai Krupai Seydhiduvaare…”

Everyone sang along with deep remembrance of our beloved Sri Sri Anna.

With folded hands, tear-filled eyes, and hearts overflowing with gratitude, our Satsang devotees circumambulated the sacred streets, repeatedly remembering the divine Kataksham (gracious glance) that Sri Sri Anna has bestowed upon us.

The programme concluded beautifully with the sweet kirtan:

“Bhashyakaram Bhaje Bhashyakaram.”

The Sri Vaishnava Bhagavatas, who had resoundingly sung the divine Names that dispel the influence of Kali, were then honoured at Sri Kaliyān Ramanuja Koodam. A grand Tadhiyaradhana was also conducted for them.

By the grace of our Guru, a sumptuous Tadhiyaradhana was offered to approximately 1,000 devotees.

Thus, the Third Annual Sri Vaishnava Bhagavata Tadhiyaradhana, held as part of the Goloka Vijaya Yatra of our beloved Sri Sri Anna, was conducted in a grand and auspicious manner under the leadership of our Sri Swamiji, on behalf of the Kalyana Srinivasan Bhajana Mandali.

Radhe! Radhe!!

Sri Sri Premikendra Sadguru Maharaj Ki Jai!!

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Recent Posts

Sri Swamiji’s Event Updates – September 2026

On September 19th, Sri Swamiji celebrated Radhastami at Madhurapuri Ashram. On September 17th and 18th, Sri Swamiji was at Madhurapuri Ashram. On September 16th morning, Sri Swamiji inaugurated the new Annadhana Hall of Sri Shridi Sai Seva Samaj at West Mambalam, Chennai. On September 15th, Sri Swamiji did morning Pooja at Premika Bhavanam. On September Read more

Satsang at Sri Premika Vittalan Temple, Vittalapuram

Satsang at Sri Premika Vittalan Temple, Vittalapuram

Janmashtami Celebration Namadwaar Ontario

GOD Namadwaar Ontario joyfully celebrated Sri Krishna Janmashtami with enthusiasm, devotion and community participation. The Namdwaar was decorated with many pots for Little Krishna and the celebrations commenced with Mahamantra Kirtan followed by Sri Krishna Jananam Parayanam, where devotees immersed themselves in the divine narration of Lord Krishna’s birth from Srimad Bhagavatham.  This was followed Read more