ஸ்ரீ ஸ்வாமிஜி ஜயந்தி விழா – வேத பாராயணம் Nov 1, 2024

 

‘மஹாரண்யம் ஶ்ரீஶ்ரீ முரளீதரஸ்வாமிஜி கைங்கரிய சபா’ இவ்வருடமும் ஸ்ரீ ஸ்வாமிஜியின் வருடாந்தர ஐப்பசி ஸ்வாதி திருநக்ஷத்ர விழாக் கொண்டாட்டத்தை, சென்னை க்ருஷ்ணஸ்வாமி திருமண மண்டபத்தில், ஶ்ரீ ஸ்வாமிஜியின் முன்னிலையில் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழாவின் அங்கங்கள் அனைத்தும் ஒருவகையில் நமது ஸ்ரீஸ்வாமிகள் ஆற்றிவரும் தெய்வீகப்பணிகளான – வேத சம்ரக்ஷணம், ஆலய சம்ரக்ஷணம், நாமகீர்த்தனம் ஆகியவற்றின் சாராம்சமாகவே திகழ்ந்தது.

Nov 1 மாலை, வேதியர்களின் “வேதஸ்வஸ்தி” கோஷத்துடன் இவ்விழா இனிதே துவங்கியது. ப்ரும்மஸ்ரீ G கார்த்திகேய ஶர்மா “ஸ்வாகத பாஷணம்” (வரவேற்புரையை) சம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் செய்தார். அதில், நம் ஶ்ரீ ஸ்வாமிஜியின் திவ்ய உந்துதலால் நிறுவப்பட்ட ட்ரஸ்டுகள் ஆற்றிவரும் வேத ஸம்ரக்ஷண பணிகளைப்பற்றியும் எடுத்துரைத்தார். நமது நிறுவனங்கள் ஏழு வேத ஆகம பாடசாலைகளை மிகச்சிறப்பாக நடத்திவருகின்றன. குருகுல வாசம் செய்யும் எண்ணற்ற வித்யார்த்திகள் ருக்,யஜுர், சாம வேதங்கள், வைணவ பாஞ்சராத்ர ஆகமம், திராவிட வேதம் மற்றும் இதிஹாஸ புராணங்களை இப்பாடசாலைகளில் பயில்கின்றனர். சுமார் முப்பது வருடங்களாக வேத பணியில் ஈடுபடும் நம் நிறுவனங்கள், ஏறத்தாழ நூற்றியம்பது வித்தான்களை இப்பாடசாலைகள் மூலம் தயார் செய்து தந்துள்ளன.

விழாவின் முதல் அங்கமாக, மன்னார்குடி உ.வே. Dr. ஶ்ரீ ப்ரசன்னா தீக்ஷிதர் நமது ஸ்ரீஸ்வாமிகளால் கௌரவிக்கப்பட்டார். இவர் நமது நாங்கூர் ஶ்ரீமதி ஜயந்தி ஜானகிராமன் நினைவு திராவிட வேதாகம பாடசாலையில் பாஞ்சராத்ர ஆகமத்தின் அத்யாபகராவார். இத்துறையில், கோயில் உற்சவங்கள் விஷயமாக செய்த ஆராய்வினால் இவருக்கு அளிக்கப்பட்ட முனைவர் பட்டத்திற்காகவும், வைணவ ஆகம துறையில் இவர் ஆற்றிவரும் அருந்தொண்டிற்காகவும், ஸ்ரீஸ்வாமிகள் இவரை கௌரவித்தார்.

அடுத்து, வேத விஷயமான புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது. “அபாக்ஷரம் ஹ்யனாயுஷ்யம் விஸ்வரம் வ்யாதி⁴பீடி³தம்” – அதாவது, “வேத சப்தங்களே  தேவதைகளின் ரூபமாக இருப்பதால் அக்ஷரலோபமின்றி, ஸ்வரலோபமின்றி பாராயணம் செய்வதால்தான் பலன் ஸித்திக்கும். இல்லாவிடில் விபரீத பலன்தான் உண்டாகும். அக்ஷரசுத்தி இல்லாவிடில் ஆயுள் குறையும்; ஸ்வரசுத்தி இல்லாவிடில் வ்யாதிதான்வரும். எனவே வேதத்தைக் கவனித்துக் கையாளவேண்டும்” என்பது சான்றோர் வாக்கு. வேதபாராயணம் செய்யும் வேதியர் எந்த சந்தேகமும் இல்லாமல் மிகச்சரியாக வேதபாராயணம் செய்யத் தேவையான மூன்று வேதபாராயண இலக்கண புத்தகங்களை, நம் ஸ்ரீ ஸாந்தீபனி குருகுலத்தில் அத்யாபகராக இருக்கும் ப்ரும்மஸ்ரீ சேதுராம கனபாடிகள் பல வருடங்கள் செய்த முயற்சியின் பலனாக தொகுத்து இயற்றினார். அந்த புத்தகங்களின் பதிப்பை நமது நிறுவனம் மேற்கொண்டது. “லக்ஷண கோஷம்” , “ஸலக்ஷண கன சந்தி” , “வர்ணக்ரம சோபானம்” ஆகிய புத்தகங்கள் நம் ஸ்ரீஸ்வாமிஜியின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டன. இதன் முதல் ப்ரதிகளை ப்ரும்மஸ்ரீ Dr. மணித்ராவிட் சாஸ்த்ரிகள், ப்ரும்மஸ்ரீ ஜம்புநாத கனபாடிகள், ப்ரும்மஸ்ரீ வயலூர் ராமக்ருஷ்ண கனபாடிகள், ப்ரும்மஸ்ரீ VGS குரு கனபாடிகள், ப்ரும்மஸ்ரீ “வைதீக ஶ்ரீ” க்ருஷ்ண கனபாடிகள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மஹாரண்யம் ஶ்ரீஶ்ரீ முரளீதரஸ்வாமிஜி கைங்கரிய சபா சார்பாக ப்ரும்மஸ்ரீ வயலூர் ராமக்ருஷ்ண கனபாடிகள் புத்தகங்களின் எழுத்தாளரான ப்ரும்மஸ்ரீ சேதுராம கனபாடிகளை கௌரவித்தார்.

அடுத்து ஒரு பழமையான, தற்சமயம் அச்சிலில்லாத ஶ்ரீ தியாகராஜ க்ருதிகள் விஷயமான ஒரு புத்தகம், அன்பர் ஒருவரது விண்ணப்பத்தினால், நம் நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு ஶ்ரீ ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் வெளியிடப்பட்டது.

அடுத்து தொடர்ந்த வேதபாராயணம் மிகவும் திவ்யமான ஒரு அனுபவமாகவே திகழ்ந்தது. சரியாக 500 வேதவித்வான்கள், ஒருங்கிணைந்து, கூட்டாக, நிதானமாக வேதத்திலுள்ள ஸ்ரீ ருத்ரத்தை பதினோரு முறை பாராயணம் செய்தனர். இதை ஏகாதச ருத்ர பாராயணம் என்பர் பெரியோர். அந்த இரண்டு மணி நேர பாராயணம் , அங்கு கூடியிருந்த பக்தர்களை பூவுலகை மறக்கச் செய்து, வேத தபோதனர்கள் வாழும் தபோலோகமோ என்றே எண்ணச் செய்துவிட்டது. அதன் ஒரு சிறு குறும்படத்தையும் இங்கு இணைத்துள்ளோம்.

அடுத்து, மேடையில் இருந்த வேத பெரியவர்களை நம் ஶ்ரீ ஸ்வாமிஜி கௌரவித்தார். வந்திருந்த அனைத்து வேதவித்பன்னர்களை கைங்கரிய சபாவின் அங்கத்தினர்கள் கௌரவித்தனர்.

இவ்விதமாக, இவ்வருட ஶ்ரீ ஸ்வாமிஜியின் ஜயந்தி விழா திவ்யமாகவும் மிகச்சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.

Leave a Comment

  • Sivakumar November 2, 2024, 12:48 pm

    🙏 sincere prayers to the LOTUS FEET OF POOJYA SRI GURUJI 🙏

  • Subha Muthuraman November 2, 2024, 2:07 pm

    Radhe Radhe. Pranams and Prostrations to Guruji Maharaj’s Divine Feet. Inner cleansing is the predominant ingredient to enable our lives to cruise through choppy waters and thus Guruji Maharaj accentuates on “Inner Excellence” more often than not, in His discourses. Guruji Maharaj’s pulses beat closest to Vedic chanting and has thus left no stone unturned for Disseminating the Glory and Grandeur of Vedas by Operating Vedic Schools, Honouring Vedic Stalwarts, time and again. The above mammoth effort is but the proverbial tip of an iceberg of the Wondrous Vedic Activities helmed by Guruji Maharaj. Confluence of a plethora of programs, under a single roof, namely Sri Rudram (Eleven times) Chanting with pitch-perfect rhythm by an amazing 500
    Scholars, Release books from the Golden Hands of Guruji Maharaj, most of us may not be even aware of the Glory and Grandiose of those texts, etc. is of a phenomenal class that Guruji Maharaj alone can carve! Guruji Maharaj’s Satsangs thus have an exemplary aura, exuberance-personified and exude an old world charm! Fulsome plaudits to all the Blessed Volunteers of Maharanyam Sri Sri Muralidhara Swamiji Kainkarya Sabha for the fluent artistry with which they executed Guruji Maharaj’s Divine Command, especially on the “Most Propitious Day” for the entire Universe – Guruji Maharaj’s Jayanthi Mahotsav Day – in Rolls Royce style – smooth, classy, heart warming – with unmatched finesse and flourish! Gratitude to Guruji Maharaj for being orchestral in conceiving and executing this program in a stunning scale, leaving us spellbound!

  • Kothandaraman V November 2, 2024, 6:45 pm

    Here Rama hare Rama Rama Rama hare hare hare krishna hare krishna krishna Krishna hare hare Jai gurunath rathe krishna 🙏🙏🙏🙏🙏

  • Sundar Raman s November 2, 2024, 10:34 pm

    நமஸ்காரம்

  • Sundar Raman November 2, 2024, 10:35 pm

    நமஸ்காரம்

  • P.S.Mahadevan November 3, 2024, 7:29 am

    🙏🙏 ஓம் நமோ பகவதே மதுர ஶ்ரீ முரளிதராய 🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏

Recent Posts

Sri Swamiji’s Event Updates – December 2024

December 6th being Shravanam, Sri Swamiji did Pooja and lit Sravana Deepam at Premika Bhavanam. He did Dolotsavam to Sri Srinivasa Perumal in the night. On December 5th, Sri Swamiji was in Madhurapuri Ashram. On December 4th, Sri Swamiji did morning Pooja and Dolotsavam at Madhurapuri Ashram. At other times, He chanted Mahamantra at Bhagavatha Read more

Puranava 2024 – Mumbai

By the immense grace of our Satgurunathar, the fifth edition of the annual event PURANAVA was conducted in Mumbai on 30th Nov 2024 at Zaveriben Auditorium, Ghatkopar. 26 schools registered sending a total of 106 teams. The event was a big success and the students were quite enthusiastic. The prelims score was mostly neck to Read more