Updates from Senganoor Kshetra
மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களின் 91வது ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீ மாதுரி அம்மா மண்டபம், புதுத்தெரு (Senganur Arch street Sri Chelliamman Koil & Sri Sri Anna Bajanai Koil complex), சேங்கனூரில், மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் பரிபூரண அருளாசிகள் மற்றும் வழிகாட்டுதல் படி ஜெயஹனுமான் சேவா டிரஸ்ட் மற்றும் சேங்கனூர் சேஷத்திர உபாசனா ஸமிதி மூலம் நூதனமாக அமைக்கப்பட்டு 24/8/2024 அன்று மாலை மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் திருக்கரங்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பு: இது சேங்கனூரில் அமைக்கப்பட்ட இரண்டாவது ஸ்ரீ மாதுரி அம்மா மண்டபமாகும்
மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களின் 91வது ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக சேங்கனூர் கிராமம், அண்ணாநகர் மேலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்.
மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களின் பரிபூரண அருளாசிகளின் படி மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் வழிகாட்டுதல் படி ஜெயஹனுமான் சேவா டிரஸ்ட் மற்றும் சேங்கனூர் சேஷத்திர உபாசனா ஸமிதி மூலம் திருப்பணி கைங்கர்யங்கள் பூர்த்தி செய்ய பட்டு, 23/8/2024 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் கல்வி பயிற்சி மையம், சேங்கனூர்
சேங்கனூர் கிராமவாழ் சிறார், சிறுமியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களின் 91வது ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக இந்த கட்டிடம் ஜெய ஹனுமான் சேவா டிரஸ்ட் மற்றும் சேங்கனூர் சேஷத்திர உபாசனா ஸமிதி மூலம் நூதனமாக அமைக்கப்பட்டு 24/8/2024 அன்று மாலை மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் திவ்ய பாதுகைகள் எழுந்தருள, மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் திருக்கரங்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் உடற்பயிற்சி மையம், சேங்கனூர்
மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவதரித்த சேங்கனூர் கிராமவாசிகளின் ஆரோக்கியமான நல்வாழ்விற்காக உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய இந்த புதிய கட்டிடம் மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் வழிகாட்டுதல் படி சேங்கனூர் சேஷத்திர உபாசனா ஸமிதி மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொது மக்களின் சார்பான ரூ. 13,06,000/- நிதியும் (கட்டிடத்திற்காக ரூ.8,94,000/- உடற்பயிற்சி உபகரணங்களுக்காக ரூ. 4,12,000/- மொத்தம் ரூ. 13,06,000/-) மற்றும் அரசு நிதியுதவியாக ரூ.26,11,000/- நிதியும் (கட்டிடத்திற்காக ரூ. 17,88,000/- உடற்பயிற்சி உபகரணங்களுக்காக ரூ.8,23,000/- மொத்தம் ரூ. 26,11,000/-) தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இப்பணிகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு சேங்கனூர் சேஷத்திர உபாசனா ஸமிதி.
-
September 10, 2024, 10:19 am
Radhe Radhe. Jai G
-
September 11, 2024, 11:13 pm
Radhe Radhe. Pranams And Prostrations to Guruji Maharaj’s Divine Feet on the auspicious Radha Ashtami day – the day all of us await to wake up to – to see the Gorgeous Decking up of our Revered and Beloved Deities, Sri Madhuri Sakhi Samedha Sri Premika Varadan! The spectacular landscape of Senganoor ( the Spiritual land that our Venerable Sri Sri Anna descended) has changed dramatically, punctuating with atomic precision on all the comprehensive needs of human existence. Yet another Glorious Chapter has blossomed from our Revered Guruji Maharaj’s Boon Bestowing Hands – Sri Madhuri Amma’s Divine Mantap, Kumbhabhishekam os Sri Kaliamman Temple, equal emphasis is laid for physical activity and mental acuity – Educational Institutions and Physical Fitness Centres. How Guruji Maharaj’s forethought in visualization of human needs, harnessing the resources for impeccable execution – amazing indeed! World Community is Eternally Indebted to our Respected Guruji!