Sri Varadaraja Perumal Temple, Thirumanikoodam, Thirunangur Divya Desam – Maha Samprokshanam
சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் பதினோரு திவ்யதேசங்களில் ஒன்று திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.
காலதேசவர்த்தமானத்தால் இந்த திருக்கோயிலில் மிகவும் சிதிலமடைந்த நிலையை கண்டு நம் குருநாதர் மஹாரண்யம் ஶ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்களின் திவ்ய ஆக்ஞையின் படி கடந்த 2001 ஆண்டு ஏகதேசமாக திருப்பணி கைங்கர்யம் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த 24 /8/2001 அன்று ஆண்டு மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது நம்மில் பலரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த திருப்பணி நடைபெற்று 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் மீண்டும் திருப்பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் நம் குருநாதரின் பரிபூர்ண அருளாசிகள் மற்றும் வழிகாட்டுதல் படி 2001 வருடம் செய்யப்பட்ட திருப்பணி களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திருக்கோயிலில் திருப்பணி கைங்கர்யங்களில் பூரணமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திரு சஞ்சய் அனுகூலா அவர்கள் இந்த கைங்கர்யங்களை (நூதனமாக ஒரு அர்ச்சகர் குடியிருப்பு உள்பட) பூர்த்தி செய்து சமர்ப்பணம் செய்துள்ளார்.
மேலும் இந்த முறை செய்யப்பட்ட திருப்பணிகளில் இந்த திருக்கோயில் வளாகத்தின் இரண்டாம் ப்ராகாரத்தின் நூதன திருமதில் சுவரை (Compound wall) தி சென்னை சில்க்ஸ் (The Chennai Silks) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு N.K. நந்தகோபால் அவர்களால் “குரு கைங்கர்யமாக” நிர்மாணம் செய்து சமர்ப்பணம் செய்தார்கள்.
இந்த திருக்கோயில் திருப்பணி கைங்கர்யங்கள் பூரணமாக பூர்த்தி அடைந்து கடந்த 25/10/2026 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷணம் நம் குருநாதரின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த திருப்பணி மற்றும் மஹா ஸம்ப்ரோக்ஷணம் கைங்கர்யங்களை நமது ஜெய ஹனுமான் சேவா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீமதி ஜெயந்தி ஜானகிராமன் நினைவு திராவிட வேத ஆகம பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தி பூர்த்தி செய்தார்கள்







