Sri Swamiji’s Thirunakshatram Celebrations in Cuddalore
ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் மாதுரி ஸகி ஸமேத ஸ்ரீ ப்ரேமிக வரதனின் அளவற்ற கருணையினால், கடலூர் நாமத்வாரில் 8.11.2026 மாலை மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜியின் ஐப்பசி ஸ்வாதி திரு நக்ஷத்திரம் முன்னிட்டு, ஸ்ரீ ஸ்வாமிஜியின் சீடர்கள் திரு குருமூர்த்தி, திரு ரவி கிருஷ்ண மூர்த்தி, மற்றும் திரு பாலாஜி இவர்களின் சத்சங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலையில் நாமசங்கீர்த்தனம், குரு மகிமை, பாகவத பாராயணம் மற்றும் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தீபங்கள் ஏற்றி பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் குருப்ரசாதம் வழங்கப்பட்டது.
சங்கீதா சாந்தம் foundationல் அன்னதானம் அளிக்கும் பாக்கியம் பெற்றோம்.







