Sri Swamiji’s Thirunakshatram Celebrations in Bathalagundu
ஸத்குருநாதர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மற்றும் மாதுரி ஸகி ஸமேத ஸ்ரீ ப்ரேமிக வரதனின் அளவற்ற கருணையினால், ஸத்குருநாதரின் வத்தலகுண்டு நாமத்வாரில் குருநாதரின் திருநக்ஷத்திர வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காலை நிகழ்ச்சிகள்:
நாமசங்கீர்த்தனம்
பாதுகாபிஷேகம்
சிறப்பு பூஜை
அனைவருக்கும் பிரசாதம்
மாலை நிகழ்ச்சிகள்:
நாமசங்கீர்த்தனம்
மதுரகீதம்
மேலும், குருநாதரின் திருவருளால் ஆதரவற்றோர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஹாரத்தி நடைபெற்று, அனைவருக்கும் குருப்ரசாதம் வழங்கப்பட்டது.
மேலும், குருநாதரின் அருளால் இரண்டு கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் சேவையும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறு குருநாதரின் திருவருளால் திருநக்ஷத்திர வைபவம் பக்தியுடனும் சேவையுடனும் இனிதே நிறைவுற்றது.







