Sri Jagannatha Puri Yatra
ஸ்ரீ ஸத்குருநாதரின் அருளாணையின்படி செப்டம்பர் 14, 15 2026 தேதிகளில் நடைபெற்ற ஸ்ரீ க்ஷேத்ர ஜகந்நாத பூரி தர்ஷன யாத்திரையில் 250க்கும் மேற்பட்ட நாமத்வார் குடும்ப அன்பர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ சாக்ஷிகோபால், அலர்நாத், ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு வசித்த கம்பீராமட், நாமாச்சார்யார் ஸ்வாமி ஹரிதாஸர் தினமும் 3 லக்ஷம் மஹாமந்திரம் ஜபம் செய்துவந்த இடமான சித்தபகூள், ஸ்ரீ போதேந்த்ராள், ஸ்ரீ ஸ்ரீ அண்ணா மன்னி ஸந்நிதி ஆகிய புனித்தலங்களில் ஸத்ஸங்கத்துடன் தரிசனம் மிக்க ஆனந்தமான அனுபவமாய் அமைந்தது.
ஸ்ரீ குருநாதர் கருணையால் அவ்வளவு பெரிய கூட்டத்திலும் ஸ்ரீ ஜகந்நாதர் ஸந்நிதியில் தரிசனங்கள், அவர் செய்த பெருங்கருணை அனைவரையும் ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்தியது.
செப்டம்பர் 15 ஆம் தேதியன்று காலை ஸ்ரீ குருபாதுகைகளுடன் ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலைச்சுற்றி நடைபெற்ற மஹாமந்த்ரகீர்த்தன பரிக்ரமா நம் வாழ்வில் ஒரு மறக்கமுடியத இன்பமானது.
கொடியேற்ற தரிசனங்கள், ஒவ்வொரு வேளையிலும் ஸ்ரீ ஜகந்நாதரின் மஹாப்ரஸதங்கள் என்று ஸ்ரீ ஸத்குருநாதரின் க்ருபையால் ஒரு விவரிக்கமுடியாத ஆனந்த அனுபவமாய் அமைந்தது இந்த MADHURA PURI DHARSHAN 2026.







