நமது குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களது ஜெயந்தி மகோத்ஸவம் 2024

ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அவதாரம் செய்த ஷேத்ரமாதலால், நமது ஶ்ரீஸ்வாமிஜியால் புனிதத்திலும் புனிதமாக கருதப்படும் சேங்கனூர் என்ற திருத்தலத்தில் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அவர்களின் ஜெயந்தி கொண்டாட்டங்கள்,  2024ஆம் வருடம் ஆகஸ்ட் 20 அன்று கோலாகலத்துடன் துவங்கியது.

ஆகஸ்ட் 20 2024
காலை 6 மணி அளவில், ப்ரேமிக ஜன்மஸ்தானில் திவ்ய தம்பதிகளான ஶ்ரீ ஶ்ரீ அண்ணா மன்னியின் தானுகந்த திருமேனிக்கு  ப்ரபோதனத்துடன், உத்ஸவம் தொடங்கியது. ரிக்-யஜுர்-ஸாம் வேத மற்றும் 4000 திவ்ய ப்ரபந்த பாராயணத்துடனும், நம் ஸத்ஸங்க பாகவதர்களின் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் சங்கீர்த்தன பஜனையுடனும், யானை, ஒட்டகம் மற்றும் நடனம் ஆடும் குதிரைகளுடன்,  ஶ்ரீ அண்ணாவின் திவ்ய பாதுகைகளுக்கு புறப்பாடு மிக விமர்சையாக நடந்தது. ஶ்ரீ ஸ்வாமிஜியின் முன்னிலையில் நடந்த இந்த பல்லக்கு புறப்பாட்டில் நூற்றுக்கணக்காண பக்தர்கள் கலந்துக்கொண்டு தன்யமானார்கள்.

காலை 8:30 மணி அளவில் அனைவரும் ப்ரசாதம் உட்கொண்ட பிறகு, ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அருளிச்செய்த அனைத்து க்ரந்த கோசங்களையும்  ஒரு வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச்செய்து, ஶ்ரீ ஸ்வாமிஜி ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் திவ்யவாணியான அனைத்து க்ரந்தங்களுக்கும்  விமர்சையாக பூஜை செய்தார். இதைத் தொடர்ந்து, 11 மணி வரை ஶ்ரீ ஸ்வாமிஜியின் முன்னிலையில், ஶ்ரீ விஷ்ணுப்ரியாஜீயின் தலைமையில் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அருளிச்செய்த “லகுஸ்தோத்ரமாலா பாகம்-1” பாராயணம் நடைபெற்றது. ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவினால் அருளிசெய்யப்பட்ட இந்த திவ்யக்ரந்தத்தின் பாரயணத்தில் சுமார் 100 பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

இவ்வாறாக ஶ்ரீ ப்ரேமிக க்ரந்த பாராயணம் நடந்துக்கொண்டிருக்கும்பொழுதே, ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் சன்னிதியில் தேப்பெருமானல்லூர் ஶ்ரீ நரஸிம்ம பாகவதர் குழுவினரால் 11:30மணி வரையில் அஷ்டபதி பஜனை நடைபெற்றது. இதை தொடர்ந்து சன்னிதியில் தீர்த்த ப்ரசாதமும், அம்பி இல்லத்தில் மஹாப்ரசாதமும் வழங்கபட்டது.

மாலை 4 மணி அளவில், ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் திவ்ய அவதாரத்தின் முக்யத்வத்தைப்பற்றி ஶ்ரீ ஸ்வாமிஜி ப்ரவசனம் செய்தார். பகவான் ஶ்ரீ க்ருஷ்ணர், ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபு மற்றும் ஶ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் திவ்ய சரித்திரங்களை எடுத்துக்காட்டி, ஶ்ரீ ஸ்வாமிஜீ, ஒரு அவதாரம் ஏற்பட நிச்சயமாக ஒரு முக்கிய தேவை, ப்ரேரணை அல்லது ஒரு பரார்தனை இருந்தேயாகவேண்டும் என்று சுட்டிகாட்டினார். “ஒரு அவதார புருஷன் வேதத்தையொட்டியும் அதே சமயத்தில் எல்லோராலும் சுலபமாக கடைபிடிக்கக்கூடியதாகவும் இருக்கக்கூடிய வழியையே காட்டுபவராக இருப்பார். நமது ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அத்தகைய ஒரு உன்னத அவதார புருஷர்” என்றும் ஶ்ரீ ஸ்வாமிஜி கூறினார்.

மாலையில் ஹம்ஸ வாஹனத்தில் ஶ்ரீ பாதுகைகளின் புறப்பாடு 6:30 முதல் 8:30 மணி வரை மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து, சுமார் 1 மணி நேரத்திற்கு பாகவதர்கள் ஶ்ரீ ஸ்ரீ அண்ணாவின் சன்னிதியில் குழுமி ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஶ்ரீ கோவிந்த ஶதகம் பாடினார்கள்.

இவ்வாறாக உத்ஸவ தினசரி இவ்வாறாக அமைக்கப்பட்டது:
6: 00 AM –  ஶ்ரீ ஶ்ரீ அண்ணா சன்னிதியில் ப்ரபோதனம்
7:00-8:00 AM –  ஶ்ரீ ஶ்ரீ அண்ணா பாதுகா புறப்பாடு
8:30- 11:30 AM – ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் திவ்யவாணி பாராயணம்
11:30 AM- சன்னிதியில் பூஜையை தொடர்ந்து தீர்த்த ப்ரசாதம்
4:00-6:00 PM – ஶுத்த ப்ரேமிக வித்யாகேந்த்ரா பாகவதர்களால் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் வைஷ்ணவ ஸம்ஹிதை ப்ரவசனம்
6:30-7:30 PM – வாஹன புறப்பாடு
8:00-9:00 PM – ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஶதகங்களின் கீர்த்தனை
9:00 PM – டோலோத்ஸவம்.

ஆகஸ்ட் 21 2024
காலை பிரபோதனம் மற்றும் பல்லக்கு புறப்பாட்டிற்குப் பிறகு, ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் கிரந்தங்களின் பாராயணம், சுத்த பிரேமிக வித்யா கேந்திர வித்யார்த்திகளால் / பாகவதர்களால் காலை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. முதலில் தமிழில் ஶ்ரீஶ்ரீ அண்ணா அருளிச்செய்த  “பாகவத தர்ம சாரம்”  ஶ்ரீ விஷ்ணுப்ரியாஜி அவர்களால் படிக்கப்பட்டது. பின்னர் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் அருளிச்செயலான  “பக்தி பாடம்”  என்ற க்ரந்தம், ஶ்ரீ ஹரிஹரசுப்ரமணியம் பாகவதரால் பாராயணம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சந்நிதியில் சென்னை ஶ்ரீ A. ஶ்ரீகாந்த் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை நடந்தது. 4 மணிக்கு ஶ்ரீ சங்கர பகவத்பாதரின் வாழ்க்கை என்ற தலைப்பில் பாகவதஶ்ரீ நாம்தேவ் அவர்களின் சொற்பொழிவு நடந்தது. அந்த சொற்பொழிவு ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் மாபெரும் படைப்பான 7500 வசனங்களைக் கொண்ட ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ஹிதா என்ற படைப்பை தழுவியிருந்தது. இந்த மாபெரும் க்ரந்தம்,  9 ஸம்பிரதாயங்களைச் சேர்ந்த சுமார் 150 வைஷ்ணவ ஆச்சாரியர்கள், மஹா புருஷர்கள் மற்றும் இந்த ஸம்பிரதாயங்களைச் சாராத இதர வைஷ்ணவ மஹான்களின் வாழ்க்கை சரித்திரங்களை உள்ளடக்கியது.

மாலை,  புன்னை மர வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இரவு 8 முதல் 9 மணி வரை ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அருளிச்செய்த  ராதிகா சதகம் பாடப்பெற்றது.

ஆகஸ்ட் 22 2024
காலை பிரபோதனம் மற்றும் பல்லக்கு புறப்பாட்டிற்குப் பிறகு, ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் கிரந்தங்களின் பாராயணமாக,  தமிழில் ஶ்ரீ பகவத் ராமானுஜாச்சாரியாரின் விஷயமாக ஶ்ரீஶ்ரீ அண்ணா  அருளிச் செய்த  ஶ்ரீ ராமானுஜ கும்மி ஶ்ரீ விஷ்ணுப்ரியாஜி தலைமையில் படிக்கப்பட்டது. பின்னர் பாகவதஶ்ரீ ஶ்ரீராம் அவர்களால் ஶ்ரீ ஜானகி விஜயம் பாராயணம் செய்யப்பட்டது.அதே நேரத்தில் சந்நிதியில் சென்னை ஶ்ரீ அஸ்வின் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை நடந்தது. ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ஹிதா பாகம் 1 இல்லிருந்து ஶ்ரீ பூபதேவர் மற்றும் ஶ்ரீ ஶ்ரீதரபாதர் என்ற தலைப்பில் பாகவத ஶ்ரீ ஹரிஹரசுப்ரமணியம் அவர்களின் சொற்பொழிவு நடந்தது.

மாலை காமதேனு வாகனத்தில் புறப்பாடு நடந்தது.

இரவு 8 முதல் 9 மணி வரை சந்நதியில் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அருளிச்செய்த கீதாவளி பாடப்பெற்றது. டோலோத்ஸவத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

23 ஆகஸ்ட் 2024
வழக்கம்போல் பிரபோதனம் மற்றும் ஶ்ரீ ஶ்ரீ பாதுகை புறப்பாட்டிற்குப் பின் 108 திவ்ய தேசங்களின் ஸ்தல புராணங்கள் மற்றும் சில முக்கியமான அபிமான ஸ்தலங்களின் புராணங்களை விவரிக்கும் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா அவர்கள் அருளிச்செய்த திவ்யதேச வைபவம் என்ற கிரந்தத்தை பிரும்ஹஶ்ரீ ஶ்ரீனிவாச பாகவதர் பாராயணம் செய்தார்.

அதேசமயம் ஶ்ரீ ஞானகுரு பாகவதர் அஷ்டபதி பஜனையை வழி நடத்தினார். மாலை பிரவசனம் ஶ்ரீ லீலா ஶுகர் மற்றும் ஶ்ரீ மதுசூதன ஸரஸ்வதிபாதர் விஷயமாக ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் வைஷ்ணவ ஸம்ஹிதா- பாகம் ஒன்றிலிருந்து ஶ்ரீவத்ஸ பாகவதரால் நடத்தப்பட்டது.

முத்து பல்லக்கில் மாலை புறப்பாடு நடந்தது. பின் இரவு ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் கீர்த்தனாவளியிலிருந்து, ஆழ்வார்களின் படைப்புகளைத் தழுவி ஸம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட 108 திவ்ய தேசங்களைப் பற்றிய கீர்த்தனைகள் பாடப்பட்டன.

 

24 ஆக்ஸ்ட் 2024
வழக்கமான நிகழ்வுகளுடன் காலை பாராயணமாக ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஶ்ரீ ராதிகா விலாஸ சம்பு மஹாகாவ்யம் ஶ்ரீ விஷ்ணுப்ரியாஜியாலும், அஷ்டபதி பஜன் ஓசூர் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதராலும் நிகழ்த்தப்பட்டது.ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் திவ்ய குணாதிசயங்கள் மற்றும் இதர மஹாத்மாக்களுடனான அவருடைய அனுபவங்கள் என்பவைகளைப் பற்றி நம் ஶ்ரீ ஸ்வாமிஜி மாலையில் சொற்பொழிவாற்றினார். மேலும் அவருடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இரவு சங்கீர்த்தனம் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் யுகள ஶதகம்.

 

25 ஆகஸ்ட் 2024
ஶ்ரீ விஷ்ணுப்ரியாஜி ஶ்ரீ ராதிகா விலாஸ சம்பு மஹாகாவ்யம் பாராயணத்தைத் தொடர்ந்தார். ப்ரம்ஹ ஶ்ரீ கபில வாஸுதேவ பாகவதரால் வைஷ்ணவ ஸம்ஹிதை பாகம் – 1 லிருந்து ஆதி ஶங்கர பகவத் பாதரின் வாழ்க்கை வரை பாராயணம் செய்யப்பட்டது.

ஶ்ரீவாஞ்சியம் ஶ்ரீ முரளிதர பாகவதர் அஷ்டபதி பஜனை செய்தார்.ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ஹிதை பாகம் – 1 லிருந்து ஶ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தலைப்பில் ப்ரம்ஹஶ்ரீ ஶ்ரீனிவாச பாகவதரால் மாலை ப்ரவசனம் செய்யப்பட்டது.சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இரவு ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஶ்ரீ ராகவ ஶதகம் பாடப்பட்டது.

 

26 ஆகஸ்ட் 2024
காலையில் ப்ரம்ஹஶ்ரீ ஶ்ரீதர் பாகவதரால் திவ்ய தம்பதிகளான ராதா கிருஷ்ணரின் பக்தி ரசத்தைக் காட்டக்கூடிய, ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் ஶ்ரீ கிருஷ்ண பக்தி ரசோதயம் பாராயணம் செய்யப்பட்டது. நேற்றைய தொடர்ச்சியாக  ஸுதர்சன் பாகவதரால் ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ஹிதை பாகம் – 1 பாராயணம் செய்யப்பட்டது. ஶ்ரீ பிரியவ்ரத பாகவதர் ஶ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தைப் பற்றி உரையாற்றினார்.ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் திருக்குமாரர் ஶ்ரீ ஹரிஜி ஶ்ரீ ஶ்ரீ பாதுகைகளுக்கு திருமஞ்சனம் மற்றும் ராஜோபசாரங்களுடன் ஶ்ரீ ஶ்ரீ பாதுகா பட்டாபிஷேகம் செய்து, பின் சொற்பொழிவும் ஆற்றினார். ஶ்ரீ ஸநத்குமார பாகவதர் ஶ்ரீ ராமாயண பட்டாபிஷேக ஸர்கம் பாராயணம் செய்தார். உடையாளூர் ஶ்ரீ பலராம பாகவதர் அஷ்டபதிபஜனையை நிறைவு செய்தார்.

மாலையில் ப்ரம்ஹஶ்ரீ கபில வாஸுதேவ பாகவதர் வைஷ்ணவ ஸம்ஹிதை முதற்பாகத்திலிருந்து ஶ்ரீ ஶ்ரீதர ஐயாவாளின் வாழ்க்கையைப்பற்றி சொற்பொழிவாற்றினார். மாலை புறப்பாடு யானை வாகனத்தில் நடந்தது. இரவு, ஶ்ரீ தீர்த்த ஶதகம் பாடப்பட்டது.

27 ஆகஸ்ட் 2024
இந்த ஏழு நாள் உற்சவங்கள் 27 ஆகஸ்ட் அன்று  சிறப்பாக நிறைவுற்றது. அதிகாலையில் ஶ்ரீ ஶ்ரீ பாதுகைகளுக்கு திருமஞ்சனமும் ரதோத்ஸவமும் சிறப்பாக நடைபெற்றன. 10 நாதஸ்வர குழுவினர் இசைத்த வண்ணம் முன்னால் சென்றது கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் திருக்குமாரர் ஶ்ரீ Dr.ரங்கன்ஜி  தேரில் எழுந்தருளியிருந்த ஶ்ரீ ஶ்ரீ பாதுகைகளுக்கு பூஜை செய்து, தேர் வடத்தை இழுத்து ரதோத்ஸவத்தை துவக்கி வைத்தார்.

காலை 8.30 மணி அளவில் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நிறைவுற்ற நிலையில், அனைத்து பக்தர்களும் ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ஜெயந்தி மஹோத்ஸவத்தின் பொன்னான நினைவுகளை சுமந்த வண்ணம் அவரவர் இல்லங்களில் பாலகிருஷ்ணரை வரவேற்க பிரியாவிடை பெற்று சென்றனர்.
ராதே ராதே!

 

 

 

Leave a Comment

  • Subha Muthuraman August 24, 2024, 7:18 pm

    Pranams and Prostrations to Guruji Maharaj’s Holy Feet. Radhe Radhe. That Guruji Maharaj extolls Senganoor, the Divine Abode where our and Beloved Sri Sri Anna Made His Glorious Descent, is not a surprise for all of us for we have been blessed to witness at least a speck of that Blissful Bond that Guruji Maharaj and Sri Sri Anna have been embraced with. The delightful chronicle of Spiritual Events from dawn to dusk in the Hallowed Abode of Sri Sri Anna and Sri Manni is Enchanting beyond words and Elegance-personified! The Confluence of Musical Proclivity of the Sathagams exude a Glorious Charm and this rich and varied weave with Pravachanams and Processions of that Nonpareil Padukas led by Guruji Maharaj in various Vahanas add Torrential Shower of Spiritual Flavour, embedded with Incalculable Exuberance, Vitality and Cheerfulness! Jai Guruji!

Recent Posts

Important Guidelines for Namadwaar and GOD Volunteers

Radhe Radhe! For kind attention of Namadwaar and GOD Volunteers to take note of guidelines given to schools in Tamilnadu: பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை – முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள். 1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது. 2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் Read more

Sri Swamiji’s Event Updates – September 2024

September 14th being Ekadasi, Sri Swamiji did Tirumanjanam and Pooja to Sri Madhuri Saki Sametha Sri Premika Varadan at Madhurapuri Ashram and distributed Theertha Prasad to devotees. On September 13th, Sri Swamiji did morning Pooja at Premika Bhavanam, Chennai. On September 12th morning, Sri Swamiji participated in the Srimad Bhagavatha Sapthagam Poorthi at Madhurapuri Ashram Read more

Satsang at Tiruvallur

Srimad Bhagavatham Lecture in Tiruvallur by Sri Muraliji