ஜகன்னாதக் கண்ணனை கண்ணாரக் கண்டேன் – 3

அன்று மாலை, ஸ்வேதகங்காவில் ஸ்நானம் செய்தேன். மனது ஸ்ரீ பகவந்நாம போதேந்திராள், அவர் செய்த ஸித்தாந்தம் இவைகளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. உடன் இருந்தவரிடம் இதையே பேசிக்கொண்டிருந்தேன். பகவன் நாமாவை சொல்வதற்கு மட்டும்தான் Do’s அண்ட் Don’ts கிடையாது. குழப்பங்கள் நிறைந்த இந்த கலியில், வேறு எந்த சாதனையை செய்ய இயலும்? புரி முழுவதும் பல பக்தர்கள்கூடி வீதிக்கு வீதி மஹாமந்திரம் கீர்த்தனம் செய்வதாக மனதால் தியானம்செய்து மகிழ்ச்சி அடைந்தேன். அங்கிருந்து கிளம்பி “கம்பீராகுகை” சென்றேன்; எல்லாம் சிறிய நெருக்கடியான சந்துகள்; மஹாபிரபு நாற்பத்து எட்டு வருடங்களே இந்த பூமியில் வாழ்ந்தார். அதில் முதல் பன்னிரண்டு வருடங்கள் வித்யாப்யாஸத்திலும், பாடசாலை நடத்தி வித்யார்த்திகளுக்கு சொல்லிக் கொடுப்பதிலும் கழிந்துவந்தது. அவர் கயா யாத்ரை சென்றார். அங்கு மாதவேந்திரபுரியின் தர்ஷனம் கிடைத்தது. மாதவேந்திரபுரி அவருக்கு ஸ்ரீக்ருஷ்ண தசாக்ஷரி மந்திரத்தை உபதேசம் செய்தார். அன்றுமுதல் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது; இரவு பகலாக அழுதார், துடித்தார், சிரித்தார், கதறினார், ஆடினார், பாடினார், மூர்ச்சையானார், மௌனமானார், விழுந்து புரண்டார், கண்களால் ஆனந்தக் கண்ணீரை பெருக்கினார், மேனிசிலிர்ந்தார், குரல் தழுதழுத்தார், அவர் மயிர் கால்களில் இரத்தம் கடுத்தது.

தன்னுடைய சொந்த ஊரான நவத்வீப்பிற்கு திரும்பும் வழியில் நாடசாலா என்ற கிராமம். அங்கு யக்ஞபத்னிகளுக்கு எப்படி தர்சனம் கொடுத்தாரோ அதே வீதியில் மஹாபிரபுவிற்கு தர்சனம் ஆயிற்று.

ஶ்யாமம் ஹிரண்யபரிதி⁴ம் வனமால்யப³ர்ஹ
தா⁴துப்ரவாலநடவேஷமனுவ்ரதாம்ஸே |
வின்யஸ்தஹஸ்தமிதரேண து⁴னானமப்³ஜம்
கர்ணோத்பலாலககபோலமுகா²ப்³ஜஹாஸம் ||

அங்கு நாடசாலை மறைந்தது, ஸ்ரீவனச்சோலை ஆனது, அதோ! ஜலஜல என்று ஓடும் ப்ரேமநதியான, ரச நதியான ஸ்ரீயமுனையின் கரையில் ஒரு உபவனம் (பூங்கா); அசோகமரங்களின் புதிய தளிர்கள் அந்த ஈரக்காற்றில் அன்பால் சிலிர்ந்து காட்சியளித்தன.

அன்பே வடிவான கோபால சிறுவர்களின் நடுவில் பலராம அண்ணனுடன், நம் கண்ணன் ஒய்யாரமாக நிற்கின்றான்! நீலநிறத்து மேனியன், தங்க நிறத்து பீதாம்பரத்தை அழகாக தரித்திருந்தான்; வனமாலை என்ன! துளிர்களான மாலை என்ன! மலைப்பொடிகள் என்ன! மயில்தோகைகள் என்ன! ஒவ்வொன்றும் கண்ணனின் சுந்தர திருமேனியில் மிளிர்கிறது! நடவேடத்தில் புன்சிரிப்போடு, தன் தோழனின் தோளில் திண்தோள் மணிவண்ணன் தன் திருக்கரத்தைப்போட்டு, மற்றோரு கரத்தால் கமலத்தை சுழற்றுகிறான்! மூன்றிடங்களில் வளைந்த திருமேனி; தாமரை பாதங்கள்; காதுகளில் நிலத்தாமரை, கருத்த, சுருளான குந்தலங்களினூடே அவன் திருமுகத்தை எட்டிப்பார்க்கிறது, அந்த சுருண்ட கேசமும், நிலத்தாமரை முகத்தின் கன்னங்களை வந்துவந்து தொட்டுத்தொட்டு ரசிப்பதைக் கண்டு, கல்கண்டு கண்ணனின் கொவ்வை இதழ்களில் கனிவான சிரிப்பு!
இந்த அழகிற்கெல்லாம் ஒரே பெருநிதியைக் கண்டார் ரசிக சிகாமணிகளுள் சிகரமான ஸ்ரீசைதன்யர்!

அதற்கு பிறகு, அவரால் ஒருநிலையில் இருக்கமுடியவில்லை; பாடசாலையை மூடினார்; அல்லும் பகலும் மஹாமந்திர கீர்த்தனம் செய்தார். அவருடன் கூட கீர்த்தனம் செய்தவர்கள் எல்லோரும் மஹாவித்வான்கள் – அத்வைதச்சார்யார், ஸ்ரீவாஸ பண்டிதர், நித்யானந்தர் போன்றவர்கள். உலகம் முழுவதும் நாமத்தை அள்ளிதருவதற்கு முன்பாகத்தான், சேர்த்துக்கொண்டார். அந்த பன்னிரண்டு வருடங்கள் அங்கு ஒரு ஆனந்த சந்தை! மஹாபிரபு பக்தர்களுக்கு அவர் அவர்களுடைய இஷ்ட தெய்வங்களாக தர்சனம் தந்தார். நகர சங்கீர்த்தனம் நடந்தது. இப்படியாக பன்னிரண்டு வருடங்கள். தன்னுடைய அன்பான மனைவியான விஷ்ணுப்ரியாவையும் பிரிந்து, துறவறம் மேற்கொண்டார். ப்ருந்தாவனம், பூரி, கிழக்கு கடற்கரை ஓரமாக ஸ்ரீகூர்மம், அன்னாவரம் , திருகழுக்குன்றம், திருவேங்கடம், காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் காசி வரைக்கும் சென்று புரி வந்தார். இப்படியாக பூமியையைச் சுற்றி வந்து பாவனமாகி மீண்டும் புரி வந்தார். கடைசி பன்னிரண்டு வருடங்கள் புரி யில் இருந்தார். அப்பொழுது அவர் பெரும்பாலும் தங்கிவந்த இடம்தான் “கம்பீராகுகை”. எப்பொழுதும் பிரேம விரஹத்திலேயே இருந்துவந்தார் மஹாபிரபு. இரவு பகல் முழுவதும் அவரைச் சுற்றி பல பக்தர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஏனென்றால், பல சமயங்கள் தன்னை மறந்து எங்காவது சென்று அங்கே மூர்ச்சையாகி விழுந்துவிடுவார். ஒருமுறை, கடற்கரையில் இருந்தார் மஹாபிரபு; மீன்களை பார்த்தார்; பகவானின் மீனாவதாரம் ஞாபகம் வந்தது; வழியில் வரும்பொழுது ஒரு குளத்தில் ஆமையை பார்த்திருந்தார்; பகவானின் கூர்மாவதாரம் நினைவிற்கு வந்தது; கடற்கரையில் ஒரு அழகான பிரம்மச்சாரி பையனை பார்த்தார்; பகவானின் வாமனாவதாரம் ஞாபகம் வந்தது; அந்த நேரமாகப் பார்த்து யாரோ ஒரு கலப்பையை எடுத்து வர, பலராமனின் ஞாபகம் வந்தது; மேலும் மேலும் மீன்கள் தெரிய, “அந்த மத்ஸ்யாவதாரமான பகவானை பிடிக்கின்றேன்” என்று கடலுக்குள் சென்று மூர்ச்சையானார். பக்தர்கள் அழுதார்கள்; துடித்தார்கள்; பிரபுவை காணவில்லை; பிரேமசமாதி; மீனவர்கள் கடலில் தாவி மீன்பிடிப்பதற்கு மீன்பிடிக்கும் வலைபோடுவார்கள் அல்லவா; அதில் பிரபு அகப்பட்டார். அவரை கடற்கரையில் எடுத்துச்சென்று முதலுதவி செய்தனர்; மஹாப்ரபு எழுந்து கீர்த்தனம் செய்துகொண்டே சென்றுவிட்டார். ஆனால் அவரை தொட்டு முதலுதவிசெய்த அத்தனை மீனவபாக்யவான்கள் மஹாமந்திரம் கீர்த்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதுவன்றே பிரேமஅதிசயம். மஹாப்ரபுவின் கம்பீராகுகையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் மனதில் அலைமோதியது. இப்பொழுது அது ஒரு கட்டிடமாக உள்ளது. அங்கு சிறிது நேரம் மஹாமந்திர கீர்த்தனம் செய்தோம்.

அங்கிருந்து வாஸுதேவ ஸார்வபௌமரின் வீட்டிற்கு சென்றோம். அவர் மஹாபிரபுவின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர். அந்த வீட்டில் அமர்ந்திருக்கும்பொழுது ஒரு நிகழ்வு ஞாபகம் வந்தது. ஸார்வபௌமர் என்ன பிரசாதமாக இருப்பினும், அதை மஹாப்ரபுவே கொடுப்பினும், பல் துலக்கி, குளித்து, பிறகுதான் எடுத்துக்கொள்வார். ஒருநாள், அதிகாலை, மஹாபிரபு கோவிலில் இருந்து பிரஸாதம் பெற்றுக்கொண்டு நேராக ஸார்வபௌமர் இல்லம் வந்தார். அன்று, அப்பொழுதுதான் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்தார் ஸார்வபௌமர். மஹாபிரபு பிரசாதத்தை தந்தவுடன், அதை எடுத்து உடனே வாயில் போட்டுக் கொண்டார். மஹாப்ரபு ஸார்வபௌமரை ஆலிங்கனம் செய்துகொண்டு, “இன்று நீ என்னை விலைக்கு வாங்கிவிட்டாய் என்றார்”. வாஸுதேவ ஸார்வபௌமர்- மஹாப்ரபு சந்திப்புகள், அவர்கள் உரையாடல்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது.

அங்கிருந்து கிளம்பி இரவு தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். மறுநாள் ஞாயிறுகிழமை; ஆடி அமாவாஸ்யை; ஸ்வேத கங்காவில் ஸ்நானம் செய்து அங்கேயே தர்ப்பணமும் செய்தேன். கோணார்க் சூரியன் கோவிலை காண ஆசையுடன் சென்றேன். அது காலப்போக்கில் மிகவும் சிதிலம் அடைந்துவிட்டது. மீதி உள்ள கட்டிடத்தை UNESCOவால் அடையாளம் காணப்பட்டு, நம் அரசாங்கத்தால் பாதுகாத்துவருகின்றது. இப்பொழுது மஹாபலிபுரம்போன்று, ஒரு சுற்றுலா தலமாக உள்ளது. அங்கிருந்து தங்குமிடத்திற்கு வந்து ஓய்வு எடுத்துக்கொண்டேன். மாலை, விஷ்ணு ஸாஸ்த்ரி அவர்கள் நடத்திவரும் பசுமாட்டு சாலைக்குச் சென்றேன்; சுமார் எழுநூறு மாடுகள்; இயற்கையான சூழ்நிலை; எல்லாம் நாட்டு மாடுகள்; அவருக்கு மேலும் பல கோசாலைகள் உள்ளது. அங்கெல்லாமும் அவர் ஆயிரக்கணக்கான பசுக்கள் வைத்துப் பராமரித்து வருகின்றார்; செய்வதற்கு மிகவும் அரிதான, போற்றத்தக்க கைங்கர்யம்.

 

தினமும் புரி ஜகன்னாதரை மஹாபிரபு எந்தளவிற்கு தர்சனம் செய்துவந்தார் என்றால், கருடமண்டபத்தின் அருகில் அவர் கைவிரலை பதித்து தரிசனம் செய்துவந்ததால், அந்த கருங்கல் சுவரில் அதன் சுவடுகள் இன்றும் உள்ளது! அப்படி ஒரு அர்ச்சாவதர நிஷ்டை! வருடத்தில் சிலநாட்கள் புரி ஜகன்னாதரின் தர்சனம் இருக்காது. இப்படியாக மஹாப்ரபு 15 நாட்களுக்கு தர்சனம் இல்லை என்று அறிந்த உடன் பக்கத்தில் உள்ள ‘அலர்நாத்’ என்ற இடத்தில் உள்ள பகவானை தர்சனம் செய்யச்செல்வார். அவர். அங்கு பூமியில் விரஹத்துடன் படுத்து துடித்திருக்கிறார்; அவருடைய விரஹத்தினால் கல்லும் கரைந்திருக்கின்றது; மஹாப்ரபுவின் திருமேனியின் பதிப்பை அந்த உருகிய பாறையில் காணலாம்.

கோயிலுக்கு பக்கத்திலே தசாவதார மந்திர்; அங்குதான் ஜயதேவர் தங்கியிருந்து தினமும் அஷ்டபதி பாடிவந்தார்; தினமும் புரி ஜகன்னாத க்ஷேத்ரம், குருவாயூர், காலடி க்ஷேத்திரங்களில் இன்றும் அஷ்டபதி பாடப்பட்டு வருகின்றது. ஒரிஸாவில் அவர் ஒரு வீட்டில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த 24 கீர்த்தனங்கள் இன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது என்றால், அதற்கு ஒரே காரணம் அதை ஜகன்னாதர் ஏற்று கொண்டதுதான். அன்று இரவு மீண்டும் கோவிலுக்கு சென்றேன்; 11 மணி இருக்கும்; வருடத்தில் ஆடி அமாவாஸ்யையன்று மட்டும் ஜகன்னாதருக்கு வைரகிரீடம் சாற்றுகின்றார்கள்; வைரகிரீடத்துடன் பிரபுவை தர்சனம் செய்தேன்; அங்கிருந்து வந்து ஓய்வெடுத்து கொண்டேன்; மறுநாள் காலை ஸித்த பகுள வ்ருக்ஷம் இருக்கக்கூடிய இடத்திற்குச் சென்று நாமம் சொல்லிவிட்டு, ஊர் வந்து சேர்ந்தேன்.

சுபம்

Leave a Comment

  • Subha Muthuraman August 24, 2024, 6:52 pm

    Radhe Radhe. Pranams And Prostrations to Guruji Maharaj’s Lotus Feet. The rhythm of reducing the mesmerizing experiences to beautiful words, couched with moving emotions, tailored with awesome thoughts, sutured with soothing feelings, Guruji Maharaj alone can master! His reminiscing Chaitanya Mahaprabhu’s Impeccable Life, the Soul-Stirring Adorable Leelas of Mahaprabhu at diverse locations,weaving a fine and delicate tapestry of that Veritable Experiences in “Gambhira Caves”, Guruji Maharaj’s visualization of that rich bygone era – leaves us spellbound! Thanksgiving for these Precious Columns, painted with Precociousness and Immaculate Dexterity can never be adequate! Relishing and Cherishing each and every word is a Penance in itself and Blessed indeed we are to traverse in those Princely Corridors that Guruji Maharaj has Gracefully Trodden, mentally and getting subsumed in that Divine Ocean of Unfathomable Spirituality! Glory to Respected Guruji!

  • S Parameswaran August 24, 2024, 10:17 pm

    Koti pranams to Mahaprabhu

  • S Parameswaran August 24, 2024, 10:18 pm

    Koti pranams to Mahaprabhu and our Jai Guruji

  • R.Ramachandra vassan August 24, 2024, 10:31 pm

    Sat guru Nath maharaj ki Jai. Guruve sarnam. Really blessed to read and assimilate your visit to lord Jagannath temple puri of Chaitanya carita Amrit of Kavi raj goswami. Listening upanayasam of yours on lord sri krishna Chaitanya maha prabhu I over whelmed to read that Amrit. Can I be blessed by you by arranging the Chaitanya carita Amrit. Guruji I need your lotus feet alone in every janama and stay at your feet doing Seva every birth. This birth is futile for me as I am not able to serve you in any manner.
    Bless this soul to attain death and re born in your satsang devotees and do your sena.

  • Ramakrishnan R S August 24, 2024, 10:54 pm

    Radhe Radhe
    JaiJagannath
    JaiGurunath 🙇‍♂️ 🙇‍♂️

  • N Ramesh August 25, 2024, 12:49 am

    🙏🙏🙏🙏

  • R.Ramachandra vassan August 25, 2024, 4:55 am

    Radhe radhe guruve sarnam sat gurunath Maharaj ki Jai.
    Guruji namaskaram and obeseiances to your lotus feet. I was mesmerized by reading your Jagannath yatra notes and felt fully immersed of staying with you in puri skhestram and getting yours and lord sri krishna Chaitanya maha prabhu blessings. Guruji I see you and sri sri bhagwan anna guruji as present lord sri krishna Chaitanya mahaprabhu and nithyanand prabhu ji. For us both guruji are gaura nithai in present years.
    Radhe radhe hari bol.
    Bless us with Mahamantram Is our jivanam.

  • G.kasinathan August 25, 2024, 12:57 pm

    Smarane Sukham..

  • Sudha sukumar August 25, 2024, 9:01 pm

    Radhe Radhe,I wished the narration would go on…. it kept me visialise the whole episode. I m looking fwd to visit the place. All glories to our GURU MAHARAJ! Jai GURUNATH.

  • S Balasubramanian August 26, 2024, 10:28 am

    Radhe radhe, Jai Jagannath.

  • R.Gayathri, West Mambalam,Chennai.33 August 27, 2024, 10:34 pm

    இன்று மகாப்ரபு தன் ஞாபகமாக நம் குருநாதரை விட்டு சென்றுள்ளார்.ஜெய் குருநாத்! ராதே ராதே!

Recent Posts

Sri Swamiji’s Event Updates – September 2024

September 14th being Ekadasi, Sri Swamiji did Tirumanjanam and Pooja to Sri Madhuri Saki Sametha Sri Premika Varadan at Madhurapuri Ashram and distributed Theertha Prasad to devotees. On September 13th, Sri Swamiji did morning Pooja at Premika Bhavanam, Chennai. On September 12th morning, Sri Swamiji participated in the Srimad Bhagavatha Sapthagam Poorthi at Madhurapuri Ashram Read more

Satsang at Tiruvallur

Srimad Bhagavatham Lecture in Tiruvallur by Sri Muraliji

Updates from Senganoor Kshetra

மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களின் 91வது ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீ மாதுரி அம்மா மண்டபம், புதுத்தெரு (Senganur Arch street Sri Chelliamman Koil & Sri Sri Anna Bajanai Koil complex), சேங்கனூரில், மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி  அவர்களின் பரிபூரண அருளாசிகள் மற்றும் வழிகாட்டுதல் படி ஜெயஹனுமான் சேவா டிரஸ்ட் மற்றும் சேங்கனூர் சேஷத்திர உபாசனா ஸமிதி மூலம் நூதனமாக அமைக்கப்பட்டு 24/8/2024 அன்று மாலை Read more