சிங்கப்பூர் விட்லி உயர்நிலைப் பள்ளியில் ஊக்கமளிக்கும் பட்டறை

டாக்டர் ஜனனி வாசுதேவன் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு ஊக்கமளிக்கும் பட்டறையை மே 7, 2025 அன்று சிங்கப்பூர் விட்லி உயர்நிலைப் பள்ளியில், தமிழில் நடத்தினார். இந்த ஊக்கமளிக்கும் பட்டறையில் 20-க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பட்டறை ஆரம்பத்தில், டாக்டர் ஜனனி, மாணவர்கள் வாழ்க்கையில் எந்த குறிக்கோளை அடைய விரும்புகிறார்கள் என்பதை பற்றி திறந்த விவாதம் நடத்தினார். இந்த கலந்துரையாடல் மூலமாக, மாணவர்கள் தெளிவான மற்றும் அளவிடக்கூடிய இலக்குகளை அமைத்துக் கொள்ளும் முக்கியத்துவத்தையும், அவற்றை தங்கள் மனதில் காட்சிப்படுத்தி, அந்த இலக்குகளை அடைவதற்காக தங்களை திசைதிருப்பிக்கொள்ள உதவும் வழிகளையும் விளக்கினார். SWOT பகுப்பாய்வு போன்ற பல்வேறு நுட்பங்கள் அறிமுகப்படுத்தி, மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவும் முறைகளை பகிர்ந்து கொண்டார். மேலும், பிரபலமான நபர்கள்- பிலிப் பெட்டிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் கனவுகளைக் எட்டியதில் பயன்படுத்திய நுண்ணறிவுகள் மற்றும் உத்திகள் பற்றிய வீடியோ கிளிப்களை மாணவர்களுக்கு காட்டி, மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கினார். இந்த பட்டறை, போர்டு தேர்வுகளுக்கான தீவிர தயாரிப்பில் ஈடுபாடாக இருக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது என்பது சிறப்பம்சம். தமிழில் நடத்தப்பட்ட இந்த தனிப்பட்ட பட்டறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாராட்டைப் பெற்றது. நடைமுறைக்கு பயனுள்ள குறிப்புகள் ஏராளமாக பகிரப்பட்டமைக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.  இந்த பட்டறையின் தாக்கத்தை விட்லி உயர்நிலைப் பள்ளி ஆசிரியரின் பின்னூட்டம் மேலும் வலியுறுத்துகிறது:

ஜனனி வாசுதேவன் அவர்களின் தன்முனைப்புப் பேச்சு, எங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர் எடுத்துரைத்த விதம் மற்றும் கையாண்ட உத்திமுறைகள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும், அவரின் கருத்துகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளவும் உறுதுணையாக இருந்தன. எங்கள் மாணவர்களின் தேர்வு நேரத்தில் அமைந்த இந்தப் பேச்சு, மாணவர்கள் சரியான குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கவும் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் உறுதிக்கும் பக்கபலமாக அமைந்தது என்று உறுதியாகக் கூறலாம்.”

Leave a Comment

  • Subha Muthuraman May 15, 2025, 8:26 pm

    Radhe Radhe. Submit, with utmost humility, Koti Pranams to Guruji Maharaj’s Divine Feet. The Inspirational Lecture and Workshop of Dr Janani Vasudevan in the Pristine Halls of Prestigious Whitley School, Singapore, [in Tamil] has earned Rich Encomiums from the School. That she threw the Forum Open seeking the ‘Avowed Goal’ of the students is praiseworthy indeed. The Inspirational Blue Print is based on the Firm Edifice of Pragmatism, which has been beautifully highlighted in the crisp write-up. The nuanced Presentation, citing the Laudable Achievements of Celebrities and the path in which they strode valiantly, robustly and, in the end, successfully – would definitely motivate the students to retool their ammunition to confront the Board Exams, with conviction! Gratification to Respected Guruji for orchestrating this Electrifying Satsang that would arm the participants in navigating life’s journey, with Immaculate Wisdom, unquestionably!

Recent Posts

Sri Swamiji’s Event Updates – March 2026

On March 9th, Sri Swamiji did morning and evening Pooja and Dolotsavam to Sri Premika Srinivasa Perumal at Premika Bhavanam. On March 8th, Sri Swamiji did morning Pooja at Premika Bhavanam. In the evening, He participated in Holi celebrations at Madhurapuri Ashram. On February 7th morning, Sri Swamiji did Pooja to Sri Premika Srinivasa Perumal Read more

Love to Share America – Events in March 2026

Sunday, March 1, 2026 | Sylvan Lake Park, Sanford, FL Approximately 25 families gathered for a joyful and refreshing morning at the Love to Share Family Fun Fest in Orlando. The event began with a family walk, followed by a calming meditation session and an energizing fun yoga session. The pavilion then came alive with Read more

Sri Swamiji’s Lecture at Narada Gana Sabha, Chennai

Sri Swamiji’s Lecture at Narada Gana Sabha, Chennai