Sri Yathothkari Perumal at Keerthanavali Mandapam
காஞ்சீபுரம் திருவெஃகா திவ்யதேச எம்பெருமானின் திருநாமம் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஸ்ரீ யதோக்தகாரி என்பதாகும்.
திருமழிசையாழ்வார் தம் சீடரான கணிகண்ணனுடன் தாமும் காஞ்சியிலிருந்து வெளியேறும்போது காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா..
உன்றன் பைநாகப்பாய் சுருட்டிக்கொள் என்று சொன்னவுடன் ஆதிஸேஷனுடன் திருமழிசையாழ்வர் பின் நடந்து சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஓர் இரவு இருந்த ஸ்தலமே ஓரிக்கை.
ஆண்டுதோறும் ஸ்ரீ திருமழிசைப்பிரான் அவதரித்த தைமகத்தன்று ஆழ்வார் ஸேவித்தபடியே முன்செல்ல தமது ஸேஷவாஹனத்தில் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்தபெருமாள் தமது உபயநாச்சிமாருடன் ஓரிக்கை எழுந்தருளுவது வழக்கம்.
இந்த ஆண்டு தை மகமான (17/1/2025) இன்று ஓரிக்கை எழுந்தருளும்வழியில் நமது ஸ்ரீ கீர்த்தனாவளி மண்டபத்திற்கும் எழுந்தருளினார்.
நம் ஸத்குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ முரளீதரஸ்வாமிஜி அவர்கள் நியமனப்படி கீர்த்தனாவளி மண்டபம் நன்கு அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீபெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் பூரணகும்ப தரிசனதாம்பூலத்துடன் விஸேஷ புஷ்ப,வஸ்த்ர உபஹாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
பெருமாளுடன் எழுந்தருளிய அத்யாபககோஷ்டியார் முதலிய அனைவருக்கும் நல்ல விதமாக மரியாதைகள் செய்யப்பட்டு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ப்ரஸாதவிநியோகத்துடன் அன்னதானமும் ஜய ஹநுமான் ஸேவா டிரஸ்டால் செய்யப்பட்டது.




-
January 18, 2025, 9:26 am
Radhe Radhe. Pranams and Prostrations to Guruji Maharaj’s Holy Feet
-
January 18, 2025, 12:07 pm
Koti Namaskarams to Guruji Maharaj’s Lotus Feet. In the recently concluded Sugary Edition of Divine Discourses by Guruji Maharaj in the Hallowed Narada Gana Sabha, where we were inundated with Limitless Spiritual Bliss, Guruji Maharaj Eulogized assiduously about Sri Sri Yathothkari Perumal. Mahodaya Day indeed when Sri Sri Thirumazhisai Alwar ( on His Jayanthi Mahotsav day), and Perumal sanctified our Awesome & Adorable Keerthanavalli Mandapam. The floral deck-up is captivating beyond words. Taking cognizance of the fact that our spiritual leanings are of fragile construct, fragrance of Bhakthiras envelopes when we’re blessed to at least witness Satsangs that “shine and sparkle” with spotlight presence and prominence! Grateful to Revered Guruji for this Visual Masterpiece that enraptures us Unendingly!